ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்? ஆர்பிஐ தகவல்

பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறது என்றால் என்ன செய்யலாம் என்பது பற்றி..

ஆர்பிஐ - கோப்புப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 12:15 pm IST

ஒருவர், ஏதேனும் ஒரு காரணத்துக்காக வங்கிக் கணக்குத் தொடங்கி அதனை சில ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் இருந்து, அதில் பணமும் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆர்பிஐ தெளிவுபடுத்தியிருக்கிறது.

ஆர்பிஐ, தற்போது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு தகவலகளை அறிவுரையை நேரடியாக மக்களுக்கே வாட்ஸ்ஆப் செய்திகள் வாயிலாக பகிர்ந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்ட தகவலில், 2 ஆண்டுகளுக்கு மேல் வாடிக்கையாளரால் எந்தப் பரிவர்த்தனைகளும் செய்யப்படவில்லை என்றால், வங்கிக் கணக்கு செயலிழந்துவிடும். எனவே, ஒரு வங்கிக் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் இல்லாமல் 2 ஆண்டுகள் ஆகிவிட்டாலே அது செயலிழந்த வங்கிக் கணக்கு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.

உங்களுக்கும் அவ்வாறு ஒரு வங்கிக் கணக்கு இருந்தால்.. இரண்டு விவரங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஒன்று. செயலிழந்த கணக்கை மீண்டும் செயல்படுத்த:

  • உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளுங்கள்

  • உங்கள் வங்கியின் ஏதேனும் கிளையில் அல்லது வீடியோ KYC மூலம் உங்கள் KYC-ஐ புதுப்பியுங்கள்

  • உங்கள் வங்கிக் கணக்கை எப்போதும் செயல்பாட்டில் வைத்திருங்கள்

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும் : https://rbikehtahai.rbi.org.in/tamil/index.html

ரிசர்வ் வங்கி (RBI) சொல்கிறது விவரமாக இருங்கள், எச்சரிக்கையாக இருங்கள்! என்று ஆர்பிஐ வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது, செயல்படாத வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையை எடுத்துவிட்டு, அந்த வங்கிக் கணக்கை மூடுவதற்கான வாய்ப்புகளையும் ஆர்பிஐ தற்போது எளிதாக்கியிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி, தேவையற்ற வங்கிக் கணக்கை மூடிவிடுவது எதிர்காலச் சிக்கல்களில் இருந்து தவிர்க்க உதவும்.

Summary

What to do if there is money in an unused bank account...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.