ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிஜேபி போராட்டத்தில் ஹிந்தியில் பேசிய பிரகாஷ் ராஜ்! வலுக்கும் எதிர்ப்பு!

சிஜேபி போராட்டத்தில் பிரகாஷ் ராஜ் ஹிந்தியில் பேசியது விமர்சிக்கப்படுவது பற்றி...

prakash raj

சிஜேபி போராட்டத்தில் பிரகாஷ் ராஜ் | ஹிந்தி திணிப்புக்கு எதிரான டி-ஷர்ட்டில் பிரகாஷ் ராஜ் - ANI | X

Published On :13 ஜூலை 2026, 11:15 am IST

தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், ஹிந்தியில் உரையாற்றியதை இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டைகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கில், பிரகாஷ் ராஜுக்கு கர்நாடக நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து, தில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிஜேபி உண்ணாவிரதப் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டார்.

அப்போது, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பாஜக ஆட்சிக்கு வந்ததாகவும், இன்று அதே ஆயுதம் நம்மிடமும் இருப்பதாகவும், அதே ஆயுதத்தைக் கொண்டு அவர்களை எதிர்த்துப் போராடுவோம் என்றும் அவர் கூறினார்.

இந்த போராட்டத்தின்போது பிரகாஷ் ராஜ் ஹிந்தி மொழியில் பேசியதற்கு இணையவாசிகள் அதிருப்தி தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

கடந்த 2020-ல் ஹிந்தி மொழி திணிக்கப்படுவதாக மத்திய அரசுக்கு எதிராக பல கன்னடத் திரைப் பிரபலங்கள் குரல் கொடுத்தனர். அப்போது ​​"நான் இந்தியை ஏற்கமாட்டேன்" (I will not get Hindi) என்று எழுதப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து பிரகாஷ் ராஜ் போராட்டத்தில் பங்கேற்றார்.

தற்போது அந்த புகைப்படத்தை பகிர்ந்து பிரகாஷ் ராஜை பாஜக ஆதரவாளர்களும் இணையவாசிகளும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.

Summary

Prakash Raj spoke in Hindi at the CJP protest - Opposition intensifies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.