ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!

ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு செய்தவர்களை பாதுகாக்க பிரதமர் மோடி மெளனம் காத்துவருவதாக கேஜரிவால் குற்றச்சாட்டு...

Ram temple row aravind kejriwal

ராமர் கோயில் / அரவிந்த் கேஜரிவால் - ஏஎன்ஐ

Published On :12 ஜூலை 2026, 4:23 pm IST

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரத்தில் குற்றவாளிகள் மீது பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை என ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் இன்று (ஜூலை 12) தெரிவித்தார்.

ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு செய்தவர்களை பாதுகாக்க பிரதமர் மோடி மெளனம் காத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

''பிரதமர் நரேந்திர மோடி எந்தவொரு திருடனையும் விட்டுவைக்கமாட்டார் என்றும், கடுமையான தண்டனை வழங்குவார் எனவும் மக்கள் நம்பியிருந்தனர்.

ஆனால், கடந்த சில நாள்களாக மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையிலேயே உள்ளது.

நில மோசடி விவகாரத்தில் இதுவரை எந்தவொரு விசாரணையும் நடைபெறவில்லை. கோயில் கட்டுமானத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளவில்லை.

கொள்ளை விவகாரத்தில் சிறிய அளவில் விசாரணை நடத்தப்பட்டது. பெயரளவில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பொய்யான முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இந்த விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

ராமஜென்ம பூமியில் நடந்த கொள்ளை மூலம் ராம பக்தர்களின் நம்பிக்கை மீது கலங்கம் ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் 70 திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 8 மாதங்களுக்கான சிசிடிவி கேமரா பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன'' என கேஜரிவால் குறிப்பிட்டார்.

கோயில் நன்கொடையில் முறைகேடு

கோவில் நிதி கையாடல் தொடர்பாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் உறுப்பினரான கிருஷ்ணா மோகன் அளித்த புகாரின் அடிப்படையில், அயோத்தி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.

மூன்று பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு தனது ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையில் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Summary

Ram Temple donation row people have no confidence PM will act AAP Aravind Kejriwal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.