ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: ஆக. 17-ல் உச்சநீதிமன்றம் விசாரணை!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் முறைகேடு தொடர்பான விசாரணை...

Ayodhya Ram Mandir Donation Theft row

உச்சநீதிமன்றம், உள்படம்: ராமர் கோயில் - எக்ஸ்

Published On :10 ஆகஸ்ட் 2026, 4:00 pm IST

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 17ல் விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ராமர் கோயில் முறைகேடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், உத்தரப் பிரதேச அரசு சார்பில் ஆஜராகி வரும் சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா, நிகழ்ச்சி ஒன்றிற்காக ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றுள்ளதால், தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்விடம் வழக்குரைஞர் ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து.

முன்னதாக, இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற உத்தரப் பிரதேச அரசு வழக்குரைஞரின் கோரிக்கையைப் பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

கோயில் நன்கொடையில் முறைகேடு பின்னணி

அயோத்தி ராமர் கோயிலில், நடைகொடையாக வழங்கப்பட்ட மக்கள் பணத்தில் முறைகேடு நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நிதி கையாடல் தொடர்பாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் உறுப்பினரான கிருஷ்ணா மோகன் அளித்த புகாரின் அடிப்படையில், அயோத்தி காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.

மூன்று பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு தனது ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையில் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The Supreme Court on Monday said it would hear on August 17 a batch of petitions seeking a court-monitored SIT probe into the alleged embezzlement of donations at the Ram temple in Ayodhya.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.