
கேரளம் எனப் பெயர் மாற்றம் செய்யும் மசோதா மக்களவையில் அறிமுகம்!
கேரளம் என மாற்றுவதற்கான மசோதாவை மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தியது பற்றி..

மக்களவை - file photo
கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்றுவதற்கான மசோதாவை மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் நீட் முறைகேடு விவகாரம், தில்லி மாணவர் போராட்டத்தின்போது நடந்த தடியடி, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று நான்கு சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன்படி தீர்ப்பாயம் சீரமைப்பு சட்டம், சுரங்கம் கனிம வளங்கள் திருத்த சட்டம், கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றும் சட்டம், கூட்டுறவு வளர்ச்சி தொடர்பான தேசிய சட்டம் ஆகிய சட்டங்கள் இன்று நாடானுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பெயர் மாற்றம் தொடர்பான மாநிலச் சட்டப்பேரவையின் தீர்மானத்தைக் கேரள அரசு ஜூன் 2024-இல் மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்தியக் குடியரசுத் தலைவர் அந்த மசோதாவை மாநிலச் சட்டப்பேரவையின் கருத்துகளைப் பெறுவதற்காக அனுப்பினார். பின்னர், மாநிலச் சட்டப்பேரவையில் அம்மசோதாவை ஏற்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.
பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டிருந்த நிலையில், மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் 'கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026-ஐ அறிமுகப்படுத்தினார்.
கேரள மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான வழிமுறைகளை 'கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026' வழங்குகிறது. மேலும், இதில் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளில் தேவையான திருத்தங்கள் மற்றும் அதையொட்டிய பிற ஏற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன என்று அம்மசோதாவின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கை தெரிவிக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கேரளாவின் பெயரை கேரளா என்பதிலிருந்து "கேரளம்" என அதிகாரப்பூர்வமான மாற்றுவதற்கான கேரளா (பெயர் மாற்றம்) மசோதா 2026-ஐ இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
The government introduced a bill in the Lok Sabha on Monday to rename 'Kerala' as 'Keralam' after the state assembly adopted a resolution two years ago.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






