ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மணிப்பூரில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த நபர் சுட்டுக்கொலை!

மணிப்பூரில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த நபர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மணிப்பூரில் பாதுகாப்புப் படை - படம் - பிடிஐ

Published On :12 ஜூலை 2026, 12:05 pm IST

மணிப்பூரில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த நபர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள நெல் வயலில் சனிக்கிழமை மாலை வேலை செய்துகொண்டிருந்த 53 வயதுடைய நபர் ஆயுதமேந்திய நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குகி இனத்தவர் பெரும்பான்மையாக வசிக்கும் இம்மாவட்டத்தின் கோவாஜாங் கிராமத்தைச் சேர்ந்த ஹாவ்லால் சிங்சித் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதேவேளையில், அவருடன் இருந்த அவரது மனைவி நெம்நெய்கிம் சிங்சித் காயமின்றி தப்பினார். சனிக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் 20 முறை துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டதாக கிராம மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று, உடலைக் கைப்பற்றினர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக (53%) உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-இல் பெரும் கலவரம் மூண்டது. இந்தக் கலவரம் மற்றும் தொடா் வன்முறைகளில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனா்.

வீடிழந்த ஆயிரக்கணக்கானோா், அரசின் நிவாரண முகாம்களிலேயே தொடா்ந்து தங்கியுள்ளனா். மாநிலத்தில் இன்னும் முழுமையான அமைதி நிலைநாட்டப்படாத சூழலில், குகி-நாகா பழங்குடியினா் இடையேயும் மோதல்போக்கு ஏற்பட்டுள்ளது.

Summary

A 53-year-old man was shot dead by some armed men while he was working in a paddy field in Manipur's Kangpokpi district on Saturday evening, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.