ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வங்கக்கடலில் மிதமான நிலநடுக்கம்: விசாகப்பட்டினத்திலும் உணரப்பட்டது

விசாகப்பட்டினம் நகரின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது பற்றி....

Mild earthquake in Bay of Bengal triggers tremors in Visakhapatnam

நிலநடுக்கம்.

Published On :12 ஜூலை 2026, 11:50 am IST

ஆந்திரப் பிரதேச கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் விசாகப்பட்டினத்திலும் உணரப்பட்டது.

இதுகுறித்து கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் தகவல்படி, இந்த நிலநடுக்கம் அதிகாலை 5 மணியளவில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இதன் மையப்புள்ளி காக்கிநாடா கடற்கரையில் இருந்து சுமார் 225 கி.மீ தொலைவில் வங்கக்கடலில் அமைந்திருந்தது.

இது ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவானது. இதனால் விசாகப்பட்டினம் நகரின் சில பகுதிகளிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக உயிர்ச்சேதமோ, சொத்து சேதமோ அல்லது வேறு எந்தவிதமான பாதிப்புகளோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. மிதமான நிலடுக்கமாக இருந்ததால்

மக்கள் மத்தியில் எந்தவிதமான பீதியும் ஏற்படவில்லை என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

வங்கக்கடலில் மிதமான நிலநடுக்கம்: விசாகப்பட்டினத்திலும் உணரப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.