ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வயநாடு நிலச்சரிவு: 5-வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி: ஒருவர் காணவில்லை!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரைத் தேடும் பணி நீடிப்பு பற்றி..

Wayanad landslide

வயநாடு நிலச்சரிவு.. தொடரும் மீட்புப் பணி... - file photo

Published On :11 ஜூலை 2026, 12:31 pm IST

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரைத் தேடும் பணி தொடர்ந்து ஐந்தாவது நாளாக நடைபெற்று வருகின்றது.

வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களை இணைக்கும் நோக்கிலான ஆனக்கோம்பொயில்-மேப்பாடி சுரங்கப் பாதை திட்டப் பணி நடைபெறும் இடத்தில் கடந்த ஜூலை 7-ஆம் தேதி இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை ஏழு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எட்டாவது நபர் ஹிமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த கட்டுமான மேலாளர் விக்ரம் ரானாவை தேடும் பணி தொடர்ந்து வருகின்றது.

தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதால், மீனாட்சி பாலம் வழியாகச் சூரல்மலை-மேப்பாடி பகுதிக்குச் செல்லும் வாகனங்களுக்கு (அத்தியாவசிய சேவைகளைத் தவிர) போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், அந்தப் பாதையில் இரு திசைகளிலும் செல்லும் வாகனங்கள் இரண்டு மணி நேர இடைவெளியில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல்துறையின் சிறப்புச் செயல்பாட்டுக் குழு, தீயணைப்புத் துறை மற்றும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த குழுக்களால் இந்தத் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Search operations continued on Saturday for the fifth day since the July 7 landslide at the tunnel project site in Kalladi here which has claimed seven lives with one person still missing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.