ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வயநாடு நிலச்சரிவு! 4 வது நாளாக மாயமானவர்களைத் தேடும் பணிகள் தீவிரம்!

வயநாடு நிலச்சரிவில் மாயமானவர்களைத் தேடும் பணிகள் 4 ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன...

Wayanad landslide

வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள்... - PTI

Published On :10 ஜூலை 2026, 10:22 am IST

வயநாடு நிலச்சரிவில் மாயமானவர்களைத் தேடும் பணிகள் 4 ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் வயநாடு மாவட்டத்திலுள்ள, மெப்பட்டியில் தனியாா் நிறுவனத்தின் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்ற பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்ந்து, நடைபெற்று வரும் மீட்புப் பணிகளின் மூலம் பலியான இருவரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 6 ஆக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பேரிடரில் மாயமான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நில அளவையாளர் ராகேஷ் குச்சாய்த் மற்றும் கட்டுமான மேலாளர் விக்ரம் ரானா ஆகியோரைத் தேடும் பணிகள் 4 ஆவது நாளான இன்றும் நடைபெற்று வருகின்றன. மாயமான இருவரும் அங்கு பணியாற்றி வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில தீயணைப்புப் படையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து இந்தத் தேடுதல் பணியை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

It has been reported that search operations for those missing in the Wayanad landslides are continuing for the fourth day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.