ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வியத்நாம் படகு விபத்தில் 15 இந்தியர்கள் பலி: பிரதமர் மோடி இரங்கல்!

வியத்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் 15 பேர் பலியானதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி - கோப்புப்படம்

Published On :11 ஜூலை 2026, 6:33 pm IST

வியத்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் 15 பேர் பலியானதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தெற்கு வியத்நாமில் பிரபல சுற்றுலா இடமான, பு குவாக் தீவு (Phu Quoc Island) அருகே, சுற்றுலாவுக்குச் சென்ற 32 இந்தியர்கள் படகு சவாரிக்குச் சென்றுள்ளனர். அவர்களுடன் 4 ஊழியர்களும் இருந்தனர்.

இன்று காலை 11.30 மணியளவில் கடலில் சென்று கொண்டிருக்கும்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 15 பேர் பலியாகினர்.

விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களில் 10 -க்கும் அதிகமானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது. இதில் திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த முருக பிரபு என்பவர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் பதிவில், ”வியத்நாமின் ஃபூ குவோக் அருகே இந்தியர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளான துயரச் செய்தியை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயங்களுடன் உயிர் பிழைத்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

நமது தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் விபத்து தொடர்பாக அனைத்தி உதவிகளையும் வழங்கி வருகின்றனர். நமது அதிகாரிகளும் வியத்நாம் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

PM Modi has expressed condolences over the deaths of 15 Indians in a boat accident in Vietnam.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.