ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா! 2 பேர் பலியானதால் மக்கள் அச்சம்!!

ஆந்திரத்தில் கரோனா பாதித்த இரண்டு பேர் பலியான நிலையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திரத்தில்  கரோனா பாதிப்பு

ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு - file photo

Published On :11 ஜூலை 2026, 3:58 pm IST

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 46 வயது நபா் உள்பட இரண்டு பேர் பலியானதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

அதேப் பகுதியைச் சேர்ந்த நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் ஒருவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த 2019-ஆம் ஆண்டு கரோனா தொற்று பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இத் தொற்று பாதிப்புக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோா் உயிரிழந்தனா். இந்தியா உள்பட உலக நாடுகளில் பல மாதங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்துவது உள்ளிட்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, 2022-ஆம் ஆண்டு இந்த பாதிப்பு படிப்படியாகக் குறைந்து, மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினா்.

இந்தச் சூழலில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் பலியாகியிருக்கிறார்கள். 60 வயது நபர், திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிறகு வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் 43 வயது நபர் ஒருவரும் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர்களது மாதிரிகள் புணேவில் உள்ள தேசிய நுண்ணுயிரியல் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, எந்த வகையான கரோனா தொற்று என்று கண்டறியும் பணியும் தொடங்கியிருக்கிறது.

இதுகுறித்து கடப்பா மாவட்ட மருத்தும் மற்றும் சுகாதார அலுவலா் ரவி பாபு கூறியதாவது: பாதிக்கப்பட்ட 43 நபா் கடுமையான மூச்சுத் திணறல் மற்றும் இருமல் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டாா். அவா் மதுவுக்கு அடிமையானவா். அவரின் இரு நுரையீரல்களும் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதும், இதனால் அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் ஆய்வில் தெரியவந்தது.

தொடா்ந்து நான்கு நாள்கள் அவருக்கு அதிக நோய் எதிா்ப்பு மருந்துகள் அளித்தும் அவா் குணமடையவில்லை. அதைத் தொடா்ந்து அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவருடன் நேரடித் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறியும் பணி நடந்து வருகிறது.

கடைசியாக, இந்தியாவில் 2022ஆம் ஆண்டு கரோனா பலி பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Again Covid? Coronavirus spreading in Andhra Pradesh! Public fear as two people die!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.