ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

என் குடும்பம் சிதைந்துவிட்டது! குடியரசுத் தலைவருக்கு கேத்தன் தந்தை உருக்கமான கடிதம்!

கேத்தன் அகர்வாலின் தந்தை குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியது பற்றி...

Katan - Siya

கேத்தன் - சியா - ENS

Published On :10 ஜூலை 2026, 3:29 pm IST

புணேவில் கொல்லப்பட்ட தொழிலதிபர் கேத்தன் அகர்வாலின் தந்தை விஷ்ணு அகர்வால், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புணேவைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் கேத்தன் அகர்வாலுக்கு சியா என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து நவம்பரில் திருமணம் நடக்கவிருந்தது. இந்த நிலையில், சியா தனது காதலன் சேத்தனுடன் சேர்ந்து கேத்தனை மலைக்கோட்டையிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்தார்.

இந்த வழக்கில், சியா, சேத்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், விரைவான நீதிக் கேட்டு, கேத்தனின் தந்தை குடியரசுத் தலைவருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், அவர் தெரிவித்திருப்பதாவது:

”வலியும், நம்பிக்கையும் நிறைந்த இதயத்துடன் இந்த மின்னஞ்சலை எழுதுகிறேன். நான் ஒரு தொழிலதிபராகவோ அல்லது செல்வாக்குமிக்கவராகவோ இதை எழுதவில்லை. மகனுக்கு நீதி தேடும் தந்தையாக மட்டுமே எழுதுகிறேன்.

கேத்தனை இழந்த வெறும் 20 நாள்களில் என் தந்தையையும் இழந்துள்ளேன். அவர் தன் பேரனை எல்லாத்தைவிடவும் அதிகம் நேசித்தார். அவனின் மரண அதிர்ச்சியும் துங்கத்தையும் தாங்க முடியாமல், வெறும் 20 நாள்களில் இறந்துவிட்டார். மகனையும் தந்தையையும் இழந்து நிற்கிறேன்.

எங்கள் குடும்பம் சிதைந்துவிட்டது.

நாங்கள் எந்தவொரு சிறப்பு சலுகையையும் கேட்கவில்லை. இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும் என்று மட்டுமே நாங்கள் விரும்புகிறோம். நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதம், எங்களைப் போன்ற குடும்பங்களின் வலியை மட்டுமே அதிகரிக்கும்.

தயவுசெய்து என் மகனின் வழக்கை மற்றுமொரு கோப்பாக மட்டும் ஆக்கிவிடாதீர்கள். இந்த வழக்கின் பின்னால், எல்லாவற்றையும் இழந்த ஒரு குடும்பம் இருக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Our family has been shattered: Ketan's father writes a moving letter to the President

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.