ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொடரும் கட்சித்தாவல்! திரிணமூல் முன்னாள் எம்.பி.க்கள் மூவர் பாஜகவில் ஐக்கியம்!!

திரிணமூல் காங்கிரஸின் மாநிலங்களவை முன்னாள் எம்.பி.க்கள் மூவர் பாஜகவில் இணைந்ததைப் பற்றி...

பாஜகவில் இணைந்த முன்னாள் எம்பிக்கள்.

Published On :9 ஜூலை 2026, 7:00 pm IST

திரிணமூல் காங்கிரஸின் மாநிலங்களவை முன்னாள் எம்.பி.க்கள் சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய் மற்றும் பிரகாஷ் சிக் பராக் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மமதா ஆதரவு அணி, அதிருப்தி அணி என கட்சி இரண்டாகப் பிரிந்தது.

இதையடுத்து, மமதா பானர்ஜியின் ஆதரவுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்த பலரும் பாஜகவில் சேர்ந்தனர். மேலும், திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா பானர்ஜி நீக்கப்பட்டு புதிய தலைவராக ரிதப்ரதா தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், மமதா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாக அவரது ஆதரவு மாநிலங்களவை முன்னாள் எம்பிக்கள் சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய் மற்றும் பிரகாஷ் சிக் பராக் ஆகியோர் பாஜகவில் இணைந்தனர்.

சால்ட் லேக்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா முன்னிலையில் சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய் மற்றும் பிரகாஷ் சிக் பராக் ஆகியோர் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.

முன்னதாக, மேற்கு வங்க தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் நிர்வாகிகள் உள்பட பலரின் ராஜிநாமாக்கள் தொடரும் என்று பாஜக தலைவரும் மேற்கு வங்க அமைச்சருமான திலிப் கோஷ் கடந்த ஜூலை 5 ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

அதேபோல், சுஷ்மிதா தேவ், சுகேந்து சேகர் ராய் மற்றும் பிரகாஷ் சிக் பராக் ஆகியோர் கடந்த மாதம் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, அக்கட்சியிலிருந்தும் விலகியிருந்த நிலையில், தற்போது பாஜகவில் இணைந்துள்ளனர்.

Summary

Former Trinamool Congress Rajya Sabha MPs Sushmita Dev, Sukhendu Sekhar Ray, and Prakash Chik Baraik joined the Bharatiya Janata Party in West Bengal's capital, Kolkata, on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.