ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கபில் தேவ் சாதனையை முறியடித்த மிட்செல் ஸ்டார்க்..! விரைவில் டாப் 10ல் இடம்!

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் சாதனை குறித்து...

Australia's Mitchell Starc (C) sends down a delivery on the first day of the first cricket Test match between Australia and Bangladesh at Marrara Stadium in Darwin on August 13, 2026. (Photo by William WEST / AFP) / --IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE--

மிட்செல் ஸ்டார்க் பந்துவீசும் காட்சி. - AFP

Published On :14 ஆகஸ்ட் 2026, 4:31 pm IST

ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னாள் இந்திய வீரர் கபில் தேவ் சாதனையை முந்தியுள்ளார்.

டார்வினில் நேற்று (ஆக.13) தொடங்கிய முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்தது. இதில் 198 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது.

அடுத்து இரண்டாம் நாள் முடிவில் வங்கதேச அணி 110 ஓவர்கள் முடிவில் 351/6 ரன்கள் குவித்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

நேற்றைய நாளில், டெஸ்ட்டில் இடது கை பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராக ஸ்டார்க் சாதனை படைத்தார். தற்போது, கபில் தேவ் (434) சாதனையை முறியடித்துள்ளார்.

வேகப் பந்துவீச்சாளர்களில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளில் ஆறாவது இடத்தில் ஸ்டார்க் இருக்கிறார். ஒட்டுமொத்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் 11ஆவது இடத்தில் இருக்கிறார். இன்னும் 5 விக்கெட்டுகள் எடுத்தால் டாப் 10 பட்டியலில் இடம்பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட்டில் அதிக விக்கெட்டுகள்

1. முரளிதரன் - 800

2. ஷேன் வார்னே - 708

3. ஜேம்ஸ் ஆண்டர்சன் - 704

4. அனில் கும்ப்ளே - 619

5. ஸ்டூவர்ட் பிராட் - 604

6. நாதன் லயன் - 568

7. க்ளென் மெக்ராத் - 563

8. ஆர். அஸ்வின் - 537

9. கோர்ட்னி வால்ஷ் - 519

10. டேல் ஸ்டெயின் - 439

11. மிட்செல் ஸ்டார்க் - 435

12. கபில் தேவ் - 434

Summary

Mitchell Starc breaks Kapil Dev's record! A chance to break into the top 10!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.