ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வெள்ளத்தில் மிதக்கும் சூரத்!

சூரத் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டிருக்கும் வெள்ளம் பற்றி...

surat flood

வெள்ளத்தில் மிதக்கும் சூரத் - ANI

Published On :8 ஜூலை 2026, 4:59 pm IST

குஜராத் மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், சூரத் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத், மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது.

சூரத் உள்ளிட்ட தெற்கு குஜராத் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Story image

ANI

கடந்த 2 நாள்களில் சூரத் மாவட்டத்தில் மட்டும் 5 பேர் பலியாகியுள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, சூரத் ரயில் நிலைய சாலைகள், அப்பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. ரயில் நிலையத்தின் மேற்கூரையிலிருந்து அருவி போல் தண்ணீர் கொட்டியதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மேலும், சூரத் ரயில் நிலையம் அருகே தண்டவாளம் நீரில் மூழ்கியதால், நேற்றிரவு முதல் இன்று காலை வரை ரயில்கள் இயக்கம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

Summary

Gujarat's Surat city Floating in Floodwaters!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.