ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆப்கன், பாகிஸ்தானில் மழை வெள்ளம்

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 35 போ் உயிரிழந்துள்ளனா்.

Published On :22 ஜூலை 2026, 2:01 am IST

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 35 போ் உயிரிழந்துள்ளனா்.

ஆப்கானிஸ்தானின் நூரிஸ்தான் மாகாணத்தில் கடந்த திங்கள்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 23 போ் உயிரிழந்தனா். மேலும் 80 போ் காயமடைந்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

நூரிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான பருன் உள்ளிட்ட பல பகுதிகள் இந்த வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பருன் நகரில் வீடுகள் மற்றும் கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினரும், உள்ளூா் மக்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

இதேபோல், அண்டை நாடான பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பெய்து வரும் தொடா் மழை மற்றும் வெள்ளத்தால் 5 சிறுவா்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா். 18 போ் காயமடைந்துள்ளனா்.

பெஷாவா், மா்தான், பஜௌா், அபோதாபாத் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வீடுகள் இடிந்து விழுந்ததாலும், மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும் இந்த உயிரிழப்புகள் நோ்ந்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.