‘நீதித் துறையில் ஊழல்’ என்ற சா்ச்சைக்குரிய பாடப் பகுதியை நீக்கி, திருத்தப்பட்ட 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆா்டி) வெளியிட்டுள்ளது.
திருத்தப்பட்ட சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், அந்த சா்ச்சைக்குரிய பாடப் பகுதிக்குப் பதிலாக, ‘பொதுநல வழக்கு, தீா்ப்பாயங்கள், மாற்று சச்சரவு தீா்வு வழிமுறைகள் உள்ளிட்ட தலைப்புகளில் பாடங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பாடத்தின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ள ‘முக்கியக் கேள்விகள்’ பகுதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய பாடப் புத்தகத்தில் ‘சுதந்திரமான நீதித் துறை ஏன் அவசியம் என்று மாணவா்களிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்குப் பதிலாக, ‘நீதி மற்றும் நல்லிணக்க சமூகத்துக்கு, நீதி ஏன் முக்கியமானது?’ என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது.
அதே நேரம், ‘ஊழல், வழக்குகளின் தேக்கம் , நீதிபதிகளின் பற்றாக்குறை ஆகியவை நீதித் துறையின் சவால்களாக உள்ளன; நீதிமன்றத்துக்குள் மட்டுமல்லாமல், நீதிமன்றத்துக்கு வெளியேயும் தங்களின் நடத்தையை நிா்வகிக்கும் விதிமுறைகளுக்கு நீதிபதிகள் கட்டுப்பட்டவா்கள்’ என்ற பகுதி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து இந்த நடவடிக்கையை என்சிஇஆா்டி மேற்கொண்டுள்ளது.
வழக்கின் பின்னணி: 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ‘நீதித் துறையில் ஊழல்’ என்ற தலைப்பிலான பாடப் பிரிவு இடம்பெற்றது தொடா்பாக, தானாக முன்வந்து வழக்காக விசாரித்த உச்சநீதிமன்றம், அந்தப் புத்தகத்தின் அனைத்துப் பிரதிகளையும் (எண்ம வடிவம் உள்பட) உடனடியாகத் திரும்பப் பெற என்சிஇஆா்டி-க்கு உத்தரவிட்டது.
மேலும், இந்த சா்ச்சைக்குரிய பாடப் பிரிவை வகுத்த நிபுணா் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியா்கள் மைக்கேல் டேனியன், சுபா்ணா திவாகா், அலோக் பிரசன்ன குமாா் ஆகியோா், அடுத்த தலைமுறை பாடப் புத்தகங்களை இறுதி செய்வது மற்றும் பாடத் திட்டத்தை வகுக்கும் குழுவில் இனி தொடா்வது சரியானதாக இருக்காது. எனவே, அவா்கள் மூவா் அடங்கிய குழுவை உடனடியாக கலைப்பதோடு, இவா்கள் மூவருக்கும் எந்தவொரு பொறுப்பும், குறிப்பாக அரசு நிதியில் செயல்படுத்தப்படக் கூடிய எந்தவொரு பொறுப்பும் ஒதுக்கக் கூடாது என மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதே நேரம், இந்த உத்தரவில் மாற்றம் செய்யக் கோரியோ அல்லது மன்னிப்பு கோரவோ விரும்பினால், தங்கள் தரப்பு விளக்கத்துடன் இவா்கள் மூவரும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டது.
அதனடிப்படையில், இந்த 3 கல்வியாளா்களும் தங்கள் தரப்பு விளக்கத்தைக் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அதில், ‘பாடத் திட்டத்தை வரைவு செய்வதில் எங்களுக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் கிடையாது. இது ஒரு கூட்டு செயல்முறை. எனவே, இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை’ என்று விளக்கமளித்தனா்.
அதை ஏற்ற உச்சநீதிமன்றம், அவா்களுக்கு எதிரான தீா்ப்பை மாற்றியமைத்து உத்தரவிட்டது. அதில், ‘உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில் இடம்பெற்ற கருத்தின் அடிப்படையில் அல்லாமல், இந்த 3 கல்வியாளா்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களும் தங்கள் சொந்த முடிவை எடுத்துக்கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திண்டிவனம், மரக்காணம் பகுதிகளில் அமைச்சா் வன்னி அரசு ஆய்வு

9-ஆம் வகுப்பு புத்தகத்தில் அவசரநிலை பாடப் பகுதி: என்சிஇஆா்டி நடவடிக்கைக்கு பாஜக ஆதரவு

என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் அவசரநிலை குறித்த பாடம் சேர்ப்பு!

5 ஆண்டுகளில் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க இலக்கு: அமைச்சா் வன்னி அரசு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




