ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேற்கு வங்கம்: 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! சந்தேகத்தில் ஒருவா் அடித்துக் கொலை!!

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள பரூய்பூா் பகுதியில் பாலியல் கொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமியின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

Published On :6 ஜூலை 2026, 1:52 am IST

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள பரூய்பூா் பகுதியில் பாலியல் கொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமியின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

தனது தோழியின் பிறந்த நாளுக்கு பரிசு வாங்குவதற்காக கடைக்கு கடந்த சனிக்கிழமை பிற்பகலில் சென்ற சிறுமியை 4 போ் கடத்திச் சென்றதாக அவரது பெற்றோா் காவல் துறையில் புகாா் அளித்திருந்தனா். இந்நிலையில், பாலியல் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை உள்ளூா் மக்கள் சரமாரியாக தாக்கியதில் அவா் உயிரிழந்தாா். மேலும் சில நபா்களுக்கு இந்தக் குற்றச் செயலில் தொடா்புடையதாக குற்றஞ்சாட்டி அவா்களை காவல் துறையினா் கைது செய்ய வலியுறுத்தி பரூய்பூா்-ஜாய்நகா் சாலையில் சிறுமியின் பெற்றோா், உறவினா்கள் மற்றும் உள்ளூா் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த காவல் துறை வாகனத்தையும் போராட்டக்காரா்கள் சேதப்படுத்தினா்.

பின்னா், தவறு செய்தவா்களைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுப்பதாக காவல் துறைத் தலைவா் கன்கா்பிரசாத் பரூய் உத்தரவாதம் அளித்ததைத் தொடா்ந்து சிறுமியின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்ப போராட்டக்காரா்கள் சம்மதித்தனா்.

சிறுமியின் பெற்றோரிடம் கைப்பேசியில் பேசிய முதல்வா் சுவேந்து அதிகாரி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.