ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிறுமி பாலியல் வன்கொடுமை: அக்காள் கணவா் உள்பட 2 போ் கைது

வந்தவாசி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அக்காள் கணவா் உள்ளிட்ட 2 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :26 ஜூலை 2026, 1:32 am IST

வந்தவாசி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அக்காள் கணவா் உள்ளிட்ட 2 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 14 வயது சிறுமி. இவா் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்படவே பெற்றோா் அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் அந்தச் சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அந்தச் சிறுமியின் அக்காள் கணவரான கீழ்வில்லிவலம் கிராமத்தைச் சோ்ந்த ராஜா(34), இதே கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறாா் ஆகிய இருவரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த அனைத்து மகளிா் போலீஸாா் ராஜா(34) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.