ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓமன், குவைத் நாடுகளுக்கு ஏர் இந்தியா விமான சேவை மீண்டும் தொடக்கம்!

ஏர் இந்தியா நிறுவனம் ஓமன், குவைத் நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.

Air India

ஏர் இந்தியா விமானம் - பிரதிப் படம்

Published On :2 ஜூலை 2026, 7:42 pm IST

ஏர் இந்தியா நிறுவனம் ஓமன், குவைத் நாடுகளுக்கான விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரைத் தொடர்ந்து மேற்கு ஆசிய நாடுகளுக்குத் தனது விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுத்தியிருந்தது. தற்போது போர் பதற்றம் ஓய்ந்துள்ள நிலையில் ஓமன் மற்றும் குவைத்துக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக இன்று அறிவித்துள்ளது.

டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம், 18 இந்திய நகரங்களிலிருந்து வாரந்தோறும் 780 விமானங்களை மேற்கு ஆசிய நாடுகளுக்கு இயக்கி வருகிறது.

தற்போது ஓமன் மற்றும் குவைத் நாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்பட்டதன் மூலம் மேற்கு ஆசிய நாடுகளுடனான போக்குவரத்து இணைப்பு மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஏர் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்மூலம், கோழிக்கோடு - சலாலா வழித்தடத்தில் ஜூலை 2 முதலும், கோழிக்கோடு மற்றும் குவைத் இடையே ஜூலை 3 முதலும் விமான சேவைகள் மீண்டும் தொடங்கவுள்ளது. அதேபோல, பெங்களூரு - குவைத் இடையேயான சேவைகள் ஜூலை 4 முதல் தொடங்கவுள்ளன. அடுத்தடுத்த நாள்களில் விமான சேவை மேலும் அதிகரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

100-க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம், நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட விமானங்களின் மூலம் 43 உள்நாட்டு மற்றும் 16 சர்வதேச நகரங்களை இணைக்கிறது.

Summary

Air India flight services to Oman and Kuwait resume!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.