ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் 12 வது நாள் போராட்டம்! சோனம் வாங்சுகின் உடல்நிலை பின்னடைவு!

தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் 12 ஆவது நாளாக போராட்டம் நடத்துவது குறித்து...

sonam wangchuk

தில்லி உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் மற்றும் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபீஜித் தீப்கே - Instagram

Published On :1 ஜூலை 2026, 4:51 pm IST

தில்லியில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஆர்வலர் சோனம் வாங்சுகின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப் பெரிய இயக்கங்களில் ஒன்றாக உருவாகியுள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி தில்லி, ஜெய்ப்பூர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் தில்லியின் ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 20 அன்று முதல் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் பங்கேற்று வருகிறார்.

மேலும், தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28 அன்று முதல் தொடர் உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், சோனம் வாங்சுகின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (ஜூலை 1) 4 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி, கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் மற்றும் சோனம் வாங்சுக் இணைந்து வெளியிட்டுள்ள விடியோ பதிவில்,

“நான் நலமாக உணர்கிறேன். ஆனாலும் சற்று சோர்வாக இருக்கிறேன். மருத்துவர் எனக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகக் கூறினார். சர்க்கரையின் அளவு 66 ஆகக் குறைந்துள்ளது. ஆனால், அது 3 நாள்களாக உணவு உண்ணாததால் தான், கீட்டோசிஸ் ஏற்படும்போது உடல் கொழுப்புகள் போன்றவற்றை உட்கொள்ளத் தொடங்குகிறது.

இது, நீண்டகால விரதத்தில் உடலைக் கடுமையாகப் பாதித்து மரணத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால், நான் அந்த நிலைக்கு அருகில் கூட இல்லை. என் உடல் எடை 2 கிலோ குறைந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 650 கிராம் எடை இழப்பு, அதுவும் இயல்பானதுதான்.

தங்களின் உயிரை இழந்த 20-க்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் கடந்த செப்டம்பரில் லடாக்கில் மரணமடைந்த 5 இளைஞர்களுடன் ஒப்பிடுகையில் எனக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் ஒன்றுமே இல்லை” என விடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Summary

In Delhi, members of the CJP are continuing their hunger strike for the fourth consecutive day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.