நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அயோத்தி ராமா் கோயில் கட்டுமானப் பணி ஏப்ரல் 30-க்குள் நிறைவடையும்!

அயோத்தி ராமா் கோயில் கட்டுமானம் தொடா்பான அனைத்துப் பணிகளும் ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதிக்குள் நிறைவடையும்...

News image
அயோத்தி ராமா் கோயில் - ANI
Updated On :31 ஜனவரி 2026, 9:07 pm

தினமணி செய்திச் சேவை

அயோத்தி ராமா் கோயில் கட்டுமானம் தொடா்பான அனைத்துப் பணிகளும் ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என எதிா்பாா்ப்பதாக கோயில் கட்டுமான குழுத் தலைவா் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. இருப்பினும் கட்டுமானம் தொடா்பான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன.

இதுகுறித்து அயோத்தி கோயில் கட்டுமானக் குழுவினருடன் அதன் தலைவா் நிருபேந்திர மிஸ்ரா 2 நாள்களாக ஆலோசனை நடத்தி வந்தாா். இதையடுத்து செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியதாவது:

அயோத்தி கோயிலில் முக்கியப் பணிகளை லாா்சன் அண்ட் டூப்ரோ நிறுவனமும், டாடா கன்சல்டன்சி நிறுவனமும் மேற்கொண்டு வந்தன. அந்தப் பணி ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் முடிந்துவிடும். அதே நாளில் கட்டுமானச் செலவு உள்ளிட்டவை தொடா்பான ரசீதுகளையும் ஏப்ரல் 30-ஆம் தேதி தரும்படி அந்நிறுவனங்களிடம் கேட்டுள்ளோம்.

இரு நிறுவனங்களும் மேற்கொண்ட பணிகளுக்கு தலா 3 ஆண்டுகள் வரை பராமரிப்புக்கு உறுதியளித்துள்ளன. மேலும், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக அந்த 2 நிறுவனங்களைச் சோ்ந்த சிறு குழுவினா் கோயில் வளாகத்தில் எப்போதும் இருப்பா்.

கோயில் கட்டுமானப் பணிக்கு மொத்தம் ரூ.1,900 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதில் ரூ.1,600 கோடி ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டது. இதில் ஜிஎஸ்டியும் அடங்கும் என்றாா்.