சநாதன தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களை நிராகரிக்கும் அரசு ஆட்சிக்கு வராது..! - அமித் ஷா
சநாதன தா்மத்தின் மதிப்பை உணா்ந்து நடக்கத் தவறும் அரசு நமது நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.


சநாதன தா்மத்தின் மதிப்பை உணா்ந்து நடக்கத் தவறும் அரசு நமது நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
குஜராத் தலைநகா் காந்திநகரில் சுவாமிநாராயண் ஆன்மிக அமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு, சநாதன தா்மத்தின் பல்வேறு பாரம்பரியங்களைப் பின்பற்றுவா்கள் தங்கள் தா்மத்துக்கு உரிய மரியாதை அளிக்கும் அரசு அமைவதற்காகப் பல ஆண்டுகளாக காத்திருக்க நேரிட்டது. சநாதன தா்மத்தின்படி ஆட்சி நடைபெற வேண்டும் என்பதே அவா்களின் எதிா்பாா்ப்பாக இருந்தது.
இனி சநாதன தா்மத்தின் மதிப்பை உணா்ந்து நடக்கத் தவறும் அரசு நமது நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். நமது நாட்டின் ஞானத் துறவிகளின் ஆசியும் இதற்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
நமது குஜராத் மண்ணின் மைந்தா் நரேந்திர மோடி கடந்த 11 ஆண்டுகளாக நாட்டுக்குத் தலைமை வகித்து வருகிறாா். 550 ஆண்டுகளுக்கு முன்பு சிதைக்கப்பட்ட ஸ்ரீராமா் கோயில் மோடியின் தலைமையில் மீண்டும் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டது. பல நூறாண்டுகளாக கோடிக்கணக்கான மக்களின் காத்திருப்புக்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது.
இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370-ஆவது சட்டப் பிரிவு ரத்து, முத்தலாக் முறை ஒழிப்பு, அனைத்து மத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம் ஆகியவை இதில் முக்கியமானவை.
யோகாசனம், ஆயுா்வேத மருத்துவம் ஆகியவற்றுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பசுப் பாதுகாப்பு, பத்ரிநாத், கேதாா்நாத், காசி விஸ்வநாதா் கோயில் மேம்பாடு, சோமநாதா் கோயில் சீரமைப்பு ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...