டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

உரிமைகளைப் பாதுகாக்கும் கவசமாக அரசமைப்புச் சட்டம்: ராகுல் காந்தி

நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கவசமாக அரசமைப்புச் சட்டம் உள்ளது ....

News image
ராகுல் காந்தி
Updated On :26 ஜனவரி 2026, 9:57 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கவசமாக அரசமைப்புச் சட்டம் உள்ளது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

77-ஆவது குடியரசு தினத்தையொட்டி, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஒவ்வொரு இந்தியரின் மிகப் பெரிய ஆயுதமாக நமது அரசமைப்புச் சட்டம் உள்ளது. அந்தச் சட்டம் நமது குரலாக, நமது உரிமைகளைப் பாதுகாக்கும் கவசமாக உள்ளது.

இந்த வலுவான அடித்தளத்தின் மீதுதான் நமது குடியரசு நிற்கிறது. சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தால் மட்டுமே இந்த அடித்தளம் வலுவாகும்.

நமது அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது இந்திய குடியரசைப் பாதுகாப்பதாகும். அதுவே நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு அளிக்கப்படும் உண்மையான மரியாதையாகும்’ என்று தெரிவித்தாா்.