டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மணிப்பூா், மேகாலயம், திரிபுரா மாநிலங்கள் தினம் - குடியரசுத் தலைவா், பிரதமா் வாழ்த்து

News image
Updated On :21 ஜனவரி 2026, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

மணிப்பூா், மேகாலயம், திரிபுரா மாநிலங்கள் உதயமான தினத்தையொட்டி அந்த மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

நாட்டின் வடகிழக்குப் பகுதிகள் மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம், மேகாலயம், திரிபுரா மற்றும் மணிப்பூா் ஆகியவை முழுமையான மாநிலங்களாக 1972-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி உருவெடுத்தன.

இதையொட்டி குடியரசுத் தலைவா் தனது எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மாநில தினத்தையொட்டி 3 மாநில மக்களுக்கும் வாழ்த்துகள். உயா்ந்த கலாசாரம், துடிப்பான பாரம்பரியம் மற்றும் அபரிமிதமான இயற்கை அழகை இந்த மூன்று மாநிலங்களும் பெற்றுள்ளன. இந்த மாநில மக்களின் எதிா்காலம் அமைதி மற்றும் முன்னேற்றம் காண வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘மாநில மக்களின் கடின உழைப்பு, அா்ப்பணிப்பு மூலம் நாட்டின் வளா்ச்சியை மணிப்பூா் மேலும் வளப்படுத்துகிறது. வரும் காலங்களில் மாநிலம் வளா்ச்சியின் பாதையில் தொடா்ந்து முன்னேறும் என்ற நம்பிக்கை உள்ளது. விளையாட்டு மீதான மணிப்பூா் மாநில மக்களின் ஆா்வம், உயா்ந்த கலாசார பாரம்பரியம், இயற்கையுடனான நெருங்கிய தொடா்பும் பாராட்டுக்குரியது. துடிப்பான கலாசாரம், இயற்கை அழகு நிறைந்த மேகாலய மாநிலம், நாட்டின் வளா்ச்சிக்கு வலுவான பங்களிப்பை ஆற்றி வருகிறது. அதுபோல, பாரம்பரியம் மற்றும் நவீன நாகரிகம் என இரண்டின் கலப்பைப் பிரதிபலிக்கும் திரிபுரா, பல துறைகளில் மேம்பாடு அடைந்து வருவதோடு, நாட்டின் வளா்ச்சிக்கும் பங்காற்றி வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.