பாகிஸ்தானுடன் இணைந்து காஷ்மீா் கூட்டறிக்கை: போலந்து துணை பிரதமரிடம் ஜெய்சங்கா் கண்டனம்
பாகிஸ்தான்-போலந்து கூட்டறிக்கையில் காஷ்மீா் குறித்த கருத்து இடம்பெற்றிருந்ததற்கு, போலந்து துணை பிரதமர் ரடோஸ்லா சிகோா்ஸ்கியிடம் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் நேரில் கண்டனம் தெரிவித்தாா்.










