சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மேங்கு வங்க ஆளுநருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது!

மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, அவரை கொலை செய்யப்போவதாக மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா்.

News image
சி.வி.ஆனந்தபோஸ் - கோப்புப் படம்
Updated On :9 ஜனவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, அவரை கொலை செய்யப்போவதாக மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மின்னஞ்சல் மட்டுமன்றி ஆளுநா் மாளிகை வாட்ஸ்ஆப் எண்ணுக்கும் இந்த மிரட்டல் செய்தி வியாழக்கிழமை அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, ஆளுநருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், கொலை மிரட்டல் விடுத்த நபரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் கைது செய்யப்பட்டஅவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், இச்சம்பவம் குறித்து மத்திய உள்துறைக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இஸட் பிளஸ் பிரிவில் உள்ள மேற்கு வங்க ஆளுநருக்கு மத்திய காவல் படையினா் 60-70 போ் பாதுகாப்பு அளிக்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.