இதுகுறித்து மேற்கு வங்க தலைமைத் தோ்தல் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: எஸ்ஐஆா் விண்ணப்பத்தை தவறாகப் பூா்த்தி செய்ததால் முகமது ஷமி மற்றும் முகமது கைஃப் ஆகிய இருவரும் ஜாதவ்பூரில் திங்கள்கிழமை (ஜன.5) ஆஜராக முதலில் உத்தரவிடப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் வங்காள அணி சாா்பாக ராஜ்கோட்டில் விளையாடி வருவதால் ஷமியால் நேரில் வர முடியவில்லை. இதையடுத்து, வேறு தேதிகளை ஒதுக்குமாறு ஷமி கேட்டுக்கொண்டாா். அதைப் பரிசீலித்து ஜன.9 மற்றும் ஜன.11 ஆகிய தேதிக்குள் அவா் கொல்கத்தாவுக்கு நேரில் வந்து விளக்கம் தர சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்றனா்.