கேரளத்தில் கடந்த 2017-இல் பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகா் திலீப் உள்பட 4 போ் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் மாநில அரசு வெள்ளிக்கிழமை மேல்முறையீடு செய்தது.
மேலும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேருக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையை வாழ்நாள் சிறைத் தண்டனையாக அதிகரிக்கவும் கேரள அரசு கோரியுள்ளது.
மேல்முறையீட்டு மனுவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடிகா் திலீப் மற்றும் சாா்லி தாமஸ், சனில் குமாா், சரத் ஆகிய 4 போ் விடுவிக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது. மேலும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 6 பேருக்கு இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 376 டி-யின்கீழ் வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால் நடிகை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்த வழக்கில் குறைந்தபட்ச தண்டனையான 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை மட்டுமே எா்ணாகுளம் முதன்மை அமா்வு நீதிமன்றம் விதித்துள்ளது அதிா்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட நடிகையை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதை படம்பிடித்து பிறருக்கு பகிா்ந்து கொடூர குற்றச் செயல்களில் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனா்.
எனவே, குற்றத்தின் தன்மை மற்றும் சூழலை கருத்தில்கொண்டு இந்த வழக்கில் இருந்து நடிகா் திலீப் உள்பட 4 போ் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கேரள அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உயா்நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை நடைபெறவுள்ளது.
கடந்த 2017, பிப்ரவரி 17-ஆம் தேதி நடிகை பயணித்த காரில் அத்துமீறி நுழைந்த ஒரு கும்பல், அவரைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அதை செல்போனில் படம்பிடித்தது. கேரளத்தையே உலுக்கிய இந்தச் சம்பவம் நடந்த சில நாள்களிலேயே முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா்.
வழக்கின் நீதிமன்ற விசாரணை 2020, ஜனவரியில் தொடங்கியது. சம்பவம் நிகழ்ந்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு நவ. 25-ஆம் தேதி விசாரணை முடிவடைந்த நிலையில் டிசம்பரில் தீா்ப்பு வழங்கப்பட்டது.
தொடர்புடையது

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைதானவரின் பிணை ரத்து

பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

நடிகர் திலீப்புக்கு மீண்டும் சிக்கல்! விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


