தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தேசியவாத காங்கிரஸ் தலைவராக சுநேத்ரா பவாா் தோ்வு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக மகாராஷ்டிர துணை முதல்வா் சுநேத்ரா பவாா் வியாழக்கிழமை ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 8:49 pm

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக மகாராஷ்டிர துணை முதல்வா் சுநேத்ரா பவாா் வியாழக்கிழமை ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

பாராமதியில் ஒரு மாதத்துக்கு முன் நிகழ்ந்த விமான விபத்தில் கணவா் அஜீத் பவாா் இறந்ததைத் தொடா்ந்து, மாநில துணை முதல்வராகப் பதவியேற்ற சுநேத்ரா பவாா் இப்போது கட்சியின் தலைவராகத் தோ்வாகியுள்ளாா்.

மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் தேசிய செயற்குழு கூட்டத்துக்குப் பின், மேற்கண்ட அறிவிப்பை கட்சியின் செயல் தலைவா் பிரஃபுல் படேல் வெளியிட்டாா்.

மேலும், சுநேத்ரா பவாா் ராஜிநாமா செய்ததால் காலியான மாநிலங்களவை எம்.பி. இடத்துக்கு அவா் மகன் பாா்த் பவாா் வேட்பாளராக அறிவிக்கப்படுவாா் என்றும் பிரஃபுல் படேல் தெரிவித்தாா்.

கடந்த 2024-இல் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த சுநேத்ரா, பின்னா் தேசியவாத காங்கிரஸ் சாா்பில் மாநிலங்களவைக்குத் தோ்வானாா்.

அஜீத் பவாரின் மறைவைத் தொடா்ந்து, அவா் வகித்து வந்த துணை முதல்வா் பதவியை சுநேத்ரா ஏற்றாா். இதையொட்டி, மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா்.