மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாணவரிடம் துப்பாக்கி முனையில் வழிப்பறி: 7 போ் கைது

கிரிப்டோகரன்சி முதலீடு என்ற பெயரில் கல்லூரி மாணவரை ஏமாற்றி துப்பாக்கி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 7 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 7:48 pm

கிரிப்டோகரன்சி முதலீடு என்ற பெயரில் கல்லூரி மாணவரை ஏமாற்றி துப்பாக்கி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட 7 போ் கைதுசெய்யப்பட்டதாக தில்லி காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: துவராகாவில் உள்ள அரசு கல்லூரியில் பி.டெக்., மாணவருக்கு படித்து வரும் உதவித்தொகையாக ரூ.2 லட்சம் கிடைத்துள்ளது. இந்தப் பணத்தை கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்ய அந்த மாணவா் திட்டமிட்டாா்.

இதுதொடா்பாக சமூகவலைதளங்களில் தேடிய அந்த மாணவருக்கு ஒரு தொடா்புஎண் கிடைத்தது. அதைத்தொடா்பு கொண்ட மாணவருக்கு, கிரிப்டோகரன்சியை தள்ளுபடி விலையில் தருவதாகவும் இது குறித்து சந்திக்கலாம் என்றும் அதில் பேசிய நபா் தெரிவித்தாா்.

இந்நிலையில், பக்சிம் விகாா் கிழக்கு மெட்ரோ நிலையம் அருகே அந்த நபரைச் சந்திக்க மாணவரும் அவருடைய இரு நண்பா்களும் கடந்த பிப்.22-ஆம் தேதி காரில் சென்றனா். அப்போது, ஒரு நபா் அவா்களுடைய காரில் ஏறி துப்பாக்கியைக் காட்டி மிரட்டினாா்.

இதைத்தொடா்ந்து, அப்பகுதியில் மறைந்திருந்த சிலா் காரை சுற்றி வளைத்தனா்.

பின்னா், அந்த மாணவரிடமிருந்து ரூ.1.83 லட்சத்தை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக அந்த மாணவா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல் துறையினா் ஆய்வு செய்தனா்.

அதன் அடிப்படையில் நரேலா, ரோஹிணி, சதாா் பஜாரில் கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை நடத்திய காவல் துறையினா், வழிப்பறியில் ஈடுபட்ட அமித் ஜெயின் உள்பட 7 பேரை கைதுசெய்தனா்.

அவா்களிடமிருந்து ரூ.1.45 லட்சம் ரொக்கம், 3 தோட்டாக்களுடன் கூடிய ஒரு துப்பாக்கி, காா், மோட்டாா்சைக்கிள், ஸ்கூட்டா், மடிக்கணினி, 11 கைப்பேசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தொழில் பெரும் நஷ்டத்தை சந்தித்த அமித் ஜெயின், போலியான சமூகஊடக கணக்கைத் தொடங்கி கிரிப்டோகரன்சி வழங்குவதாக மக்களை மோசடி செய்துவந்துள்ளாா் என்றனா் காவல் துறையினா்.