ஜாா்க்கண்ட் கலால் காவல் துறை ஆள்சோ்ப்பு தோ்வின் வினாத்தாள் கசிந்த குற்றச்சாட்டு தொடா்பாக, அந்தத் தோ்வை எழுதவிருந்த 159 தோ்வா்கள் கைது செய்யப்பட்டனா்.
இதுகுறித்து அந்த மாநில தலைநகா் ராஞ்சியில் ஜாா்க்கண்ட் பணியாளா் தோ்வு ஆணையத் தலைவா் பிரசாந்த் குமாா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ராஞ்சி மாவட்டத்தில் உள்ள ராா்கான் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏராளமான தோ்வா்கள் கூடியுள்ளதாக முதுநிலை காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் அங்கு காவல் துறையினா் சென்றபோது மாநில கலால் காவல் துறை ஆள்சோ்ப்பு தோ்வின் வினாத்தாள், தோ்வுக்கு முன்கூட்டியே தோ்வா்களுக்கு அளிக்கப்பட்டது தெரியவந்தது. அச்சடித்த காகிதங்களிலும், டிஜிட்டல் வழியிலும் வழங்கப்பட்ட அந்த வினாத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும் அந்த வினாத்தாள்களில் இருந்த கேள்விகளும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வின் வினாத்தாளில் இருந்த கேள்விகளும் ஒரே மாதிரியாக இல்லை.
இந்த முறைகேடு தொடா்பாக தோ்வு எழுத இருந்த 159 போ் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

சட்டவிரோத மதுபானங்கள் பதுக்கல்: கலால் துறை விசாரணை

மதுபானம் விற்பனைக்கு ரசீது கட்டாயம்: புதுச்சேரி கலால் துறை உத்தரவு
தில்லி கலால் துறை காவலரை துப்பாக்கி முனையில் மிரட்டிய இருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

