இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த வாரம் ஏஐ உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா-அமெரிக்க இடையேயான ஒப்பந்தம் சமரசத்தால் செய்யப்பட்டது போன்ற வாசகங்கள் அடங்கிய ஆடைகளை அணிந்து இருந்தனர். போராட்டத்தை ஆரம்பித்த சில விநாடிகளில் தாங்கள் அணிந்திருந்த சட்டையைக் களைந்து எதிர்ப்பு முழக்கமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், இந்தப் போராட்டத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய்பானு சிப் என்பவரை போலீஸார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். கைது நடவடிக்கையை அடுத்து உதய்பானுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பக்கத்தில்,
சத்தியத்திற்கான அமைதியான மற்றும் வன்முறையற்ற எதிர்ப்பு என்பது நமது பெருமைமிக்க பாரம்பரியமாகும். இது மகாத்மா காந்தியிடமிருந்தும் நமது இந்திய மூதாதையர்களிடமிருந்தும் பெறப்பட்டது.
உலகளாவிய அழுத்தத்திற்கு அடிபணிந்து இந்தியாவின் நலன்கள் சமரசம் செய்த பிரதமர் மற்றும் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புவது இந்தியர்களின் நலனுக்காகும் என்று அவர் கூறினார்.
மக்களுக்காகக் குரலை உயர்த்தியதற்காக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் வெட்கக்கேடானது.
இளைஞர் காங்கிரஸின் அச்சமற்ற வீரர்களுடன் காங்கிரஸ் கட்சி உறுதியாக நிற்கிறது என்று அவர் கூறினார்.
Summary
Congress general secretary Priyanka Gandhi Vadra on Wednesday said the action taken against Youth Congress members for raising the voice of the people is "highly condemnable" and "shameful".
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மறுவரையறை மசோதா - ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் சதி: பிரியங்கா காந்தி

அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேறினால் ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும்: பிரியங்கா காந்தி எதிா்ப்பு
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

கேரள தேர்தல்: பாஜக - எல்டிஎஃப் இடையே ரகசிய ஒப்பந்தம்! பிரியங்கா காந்தி தாக்கு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


