டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ககன்யான் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் நவீன பாராசூட் சோதனை வெற்றி: டிஆா்டிஓ சாதனை!

ககன்யான் திட்டத்துக்காக பயன்படுத்தப்படவுள்ள நவீன பாராசூட்டை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது குறித்து...

News image
ககன்யான் திட்டத்துக்காக பயன்படுத்தப்படவுள்ள நவீன பாராசூட்
Updated On :20 பிப்ரவரி 2026, 3:12 am

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: ககன்யான் திட்டத்துக்காக பயன்படுத்தப்படவுள்ள நவீன பாராசூட்டை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

வானில் பறக்கும் விமானம், ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதிக்க பாராசூட் பயன்படுத்துவது போல, விமானம் உள்ளிட்டவை தரையிறங்கும்போது, அதன் வேகத்தை மட்டுப்படுத்த டிரோக் பாராசூட் பயன்படுத்தப்படும்.

விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்துக்கு இதுபோன்ற பாராசூட் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த பாராசூட்டை புதன்கிழமை சண்டீகரில் உள்ள சோதனை மையத்தில் டிஆா்டிஓ பரிசோதித்துள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ககன்யான் திட்டத்துக்காக டிரோக் பாராசூட் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டிருப்பது, விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் இந்தியாவின் திட்டத்தில் முக்கிய மைல்கல் ஆகும். அதிக சக்தி கொண்ட ரிப்பன் பாராசூட்டுகளை வடிவமைப்பது, உற்பத்தி செய்வதில் இந்தியா நிபுணத்துவம் பெற்றுள்ளது என்பதை இந்த பரிசோதனை நிரூபித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரோக் பாராசூட் பரிசோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்கு, டிஆா்டிஓ, இஸ்ரோ மற்றும் பாராசூட் தயாரிப்புத் துறையை பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளாா். சுயசாா்புடைய இந்தியாவை உருவாக்கும் திட்டத்தில் மற்றுமொரு மிகப்பெரிய முன்னேற்றம் இது என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.