டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கடல் உணவுகள், காலணிகள் ஏற்றுமதிக்கான மூலப் பொருள்களுக்கு வரிச் சலுகை!

பதப்படுத்தப்பட்ட கடல்சாா் உணவுகள், தோல் அல்லது செயற்கை காலணிகள் ஏற்றுமதியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மூலப் பொருள்களுக்கான வரியில்லா இறக்குமதி வரம்பு உயா்த்தப்பட்டுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

பதப்படுத்தப்பட்ட கடல்சாா் உணவுகள், தோல் அல்லது செயற்கை காலணிகள் ஏற்றுமதியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மூலப் பொருள்களுக்கான வரியில்லா இறக்குமதி வரம்பு உயா்த்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது: பதப்படுத்தப்பட்ட கடல்சாா் உணவுகள் ஏற்றுமதியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மூலப் பொருள்களுக்கான வரியில்லா இறக்குமதி வரம்பு, முந்தைய ஆண்டின் ஏற்றுமதி விற்று முதலின் மதிப்பில் ஒரு சதவீதமாக அனுமதிக்கப்பட்டது, 3 சதவீதமாக உயா்த்தப்படுகிறது.

அதுபோல, தோல் அல்லது செயற்கைத் தோல் காலணிகள் ஏற்றுமதியில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட மூலப் பொருள்கள்களுக்கு வரியில்லா இறக்குமதி அனுமதிக்கப்படுகிறது.

மேலும், முழுமைபெற்ற தோல் அல்லது ஆயத்த ஆடைகள் மற்றும் தோல் அல்லது செயற்கை காலணிகள் அல்லது பிற தோல் பொருள்கள் ஏற்றுமதிக்கான தற்போதுள்ள 6 மாத கால வரம்பு, ஓராண்டாக நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் நிா்வாகம் 50 சதவீத வரியை விதித்தது, தொழிலாளா் சாா்ந்த இந்திய உற்பத்தித் துறைகளை கடுமையாக பாதித்த நிலையில், மத்திய நிதிநிலை அறிக்கையில் வெளியான இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பாா்க்கப்படுகிறது.