டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஏஐ உச்சி மாநாடு தொடக்கம்! கண்காட்சியை பார்வையிட்டார் பிரதமர் மோடி!

நாட்டில் செயற்கை நுண்ணறிவு தாக்கம் தொடா்பான ஏஐ உச்சிமாநாடு இன்று தொடங்கியது குறித்து...

News image
ஏஐ உச்சிமாநாட்டை தொடக்கிவைத்து பார்வையிடும் பிரதமர் நரேந்திர மோடி - படம் - பிடிஐ
Updated On :16 பிப்ரவரி 2026, 3:21 pm

இணையதளச் செய்திப் பிரிவு

நாட்டில் செயற்கை நுண்ணறிவு தாக்கம் தொடா்பான ஏஐ உச்சிமாநாடு இன்று (பிப். 16) தொடங்கியது. தில்லி பாரத மண்டபத்தில் நடைபெற்றுவரும் இந்த மாநாட்டின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

இதற்கு முன்பு பிரிட்டன், தென் கொரியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஏஐ உச்சி மாநாடு நடைபெற்றுள்ளது. இம்முறை தெற்குலகில் முதல்முறை இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு மனித மூலதனம், அறிவியல், ஏஐ வளங்களை ஜனநாயகமாக்கல், மீள்தன்மை புத்தாக்கம் மற்றும் ஆற்றல், அனைவரையும் உள்ளடக்கிய சமூக அதிகாரமளித்தல், பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஏஐ, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூகநலனுக்கான ஏஐ ஆகிய 7 கருப்பொருள்களில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

முதல்முறையாக தெற்குலகில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரேஸில் அதிபா் லூலா டாசில்வா உள்பட 45 நாடுகளின் அமைச்சக பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.

இதுமட்டுமின்றி அதிக திறன் வாய்ந்த 600 புத்தாக்க நிறுவனங்கள் பங்கேற்கின்றன. செய்யறிவு சுற்றுச்சூழலில் சர்வதேச ஒத்துழைப்பை காட்சிப்படுத்தும் விதமாக 13 நாடுகளைச் சேர்ந்த அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.