காதலர் தினம்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!
டூடுல் வெளியிட்டு காதலர் தினத்தைச் சிறப்பித்த கூகுள்..


காதலர் தினத்தை முன்னிட்டு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.
உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. காதலை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளக் காதலர் தினத்தைச் சிறப்பாகக் கருதுகிறார்கள் காதலர்கள். இன்றைய தினத்தில் கடற்கரை, மால்கள், பூங்கா உள்ளிட்ட இடங்களில் அதிகளவிலான மக்கள் கூடுவது வழக்கம்.
உலகின் பிரபல தேடுபொறி தளமான கூகுள் நிறுவனம் முக்கியஸ்தர்களின் பிறந்தநாள், விடுமுறை நாள்கள், முக்கிய தேதிகள் உள்பட சிறப்புத் தினங்களை அனிமேஷன்கள், ஸ்லைடுஷோக்கள், விடியோக்கள் மற்றும் கேம்கள் உள்பட பல்வேறு வடிவங்களில் வழங்கி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்புக் கவன ஈர்ப்புச் சித்திரம் (டூடுல்) வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.
இன்றைய டூடுல் காதல் தினத்தைக் கொண்டாடுகிறது. கைகளால் செய்யப்பட்ட பரிசுகளின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. நீங்கள் இதயப்பூர்வமான குறிப்பை எழுதினாலும், சுவையான விருந்தை தயார் செய்தாலும், நாம் அக்கறை கொண்டவர்களைக் கொண்டாட இது ஒரு அற்புதமான வாய்ப்பு. காதலர் தின வாழ்த்துகள். இவ்வாறு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...