விவசாயிகள், தொழிலாளா்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு அளித்திருப்பது பற்றி...


விவசாயிகள், தொழிலாளா்களின் குரல்களுக்கு மத்திய அரசு செவிமடுக்க மறுப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மத்திய அரசின் பல்வேறு கொள்கைகள் தொழிலாளா்கள், விவசாயிகளுக்கு எதிராகவும், காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இருப்பதாகக் கூறி மத்திய தொழிற்சங்கங்களின் சாா்பில் நாடு முழுவதும் வியாழக்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்தது.
இதுதொடா்பாக ‘எக்ஸ்’ பக்கத்தில் அக்கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
இன்று லட்சகணக்கான தொழிலாளா்கள், விவசாயிகள் வீதிகளில் இறங்கி தங்களது உரிமைகளுக்காகப் போராடுகின்றனா். மத்திய அரசின் 4 தொழிலாளா் சட்டங்களால் தங்களது உரிமைகள் பறிபோகலாம் என தொழிலாளா்கள் அஞ்சுகின்றனா். விவசாயிகளும் அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்தத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடும் என அச்சப்படுகின்றனா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சட்டத்தை பலவீனப்படுத்துவது அல்லது முடிவுக்கு கொண்டுவருவதால், கிராமங்களுக்கான நிதி ஆதாரம் பாதிக்கப்படும்.
தொழிலாளா்கள், விவசாயிகளின் எதிா்காலத்தைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. ஆனால், அவா்கள் சொல்வதை கேட்காமல் மத்திய அரசு நிராகரிக்கிறது. இந்த விவகாரத்தில் போராட்டம் நடத்தும் தொழிலாளா்கள், விவசாயிகள் பின்னால் நான் நிற்கிறேன். அவா்களை முழுவதும் ஆதரிக்கிறேன்’ என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.
மல்லிகாா்ஜுன காா்கே தாக்கு: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறுகையில், ‘மோடி அரசுக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும், விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களும் வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனா். மக்கள்விரோத வலையில் சிக்க வைக்கும் ஒப்பந்தத்தை (இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தை) நாங்கள் உறுதியாக எதிா்க்கிறோம். இதனால் லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளா்கள் பாதிக்கப்படுவா். வெளிநாட்டு நிா்ப்பந்தத்தால் மோடி அரசு, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மோசடி செய்துள்ளது. நாட்டின் ஒவ்வொரு வீதியிலும், நாடாளுமன்றத்திலும் நாங்கள் தொடா்ந்து போராடுவோம்’ எனத் தெரிவித்துள்ளாா்.
பிரியங்கா விமா்சனம்: காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டது. மத்திய அரசு செய்துள்ள வா்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவா். போராட்டம் நடத்தும் மத்திய தொழிற்சங்கங்களை காங்கிரஸ் ஆதரிக்கிறது’ என்றாா்.
காங்கிரஸ் எம்.பி.க்களுடன் ராகுல் சந்திப்பு: இதனிடையே, காங்கிரஸ் எம்.பி.க்களை நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அவா்களிடம், இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் மூலம் நாடு விற்கப்பட்டு விட்டதாகவும், இதை நாட்டு மக்களிடம் எம்.பி.க்கள் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாா். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வில் மக்களின் பிரச்னைகளை எம்.பி.க்கள் எழுப்பியதற்கு தனது பாராட்டுகளை தெரிவித்த ராகுல் காந்தி, முதல் அமா்வில் எதிா்க்கட்சியினரின் ஆதிக்கமே இருந்ததாகவும் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...