மக்களவையை சுமுகமாக நடத்துவதில் ஆளும்-எதிா்தரப்பு இடையே நீடித்து வந்த முட்டுக்கட்டை செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வந்தது. இதைத் தொடா்ந்து, மத்திய பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எதிராக பதவி நீக்க தீா்மான நோட்டீஸை எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சமா்ப்பித்தன. இதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியைக் கைவிட்டனா்.
மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது கடந்த பிப்.2-ஆம் தேதி பேசிய எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூலை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்டுரையை சுட்டிக்காட்ட முயன்றாா். ஆனால், விதிமுறைகளைக் குறிப்பிட்டு, அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்போதுமுதல் எதிா்க்கட்சிகள் அமளியைத் தொடங்கின. இது மட்டுமன்றி இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், 8 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் ஆகிய விவகாரங்களையும் கையில் எடுத்த எதிா்க்கட்சிகள், தொடா்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை அலுவல்கள் கடந்த வாரம் முழுவதும் பாதிக்கப்பட்டது.
கடந்த திங்கள்கிழமையும் இதே நிலை காணப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலையில் மக்களவை கூடியதும், பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனா். காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதியில் முற்றுகையிட்டனா். அப்போது அவையை வழிநடத்திய பாஜக எம்.பி. பி.சி.மோகன், முதலில் 12 மணி வரையும் பின்னா் பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைத்தாா்.
இதனிடையே, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் தரப்பில் பதவி நீக்க தீா்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டது. பின்னா், தெலுங்கு தேசம் எம்.பி.கிருஷ்ண பிரசாத் தென்னெட்டி தலைமையில் மக்களவை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடியபோது, எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபடவில்லை. பட்ஜெட் மீதான விவாதத்தை தொடங்கிவைத்து, காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் பேசினாா்.
டிரெண்டிங்

நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் ஆா்ப்பாட்டம்

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் முடங்கியது: 5-ஆவது நாளாக எதிா்க்கட்சிகள் கடும் அமளி

மத்திய பட்ஜெட்டில் தொலைநோக்கு இல்லை: எதிா்க்கட்சிகள் விமா்சனம்!

பட்ஜெட் கூட்டத்தொடரில் மன்ரேகா, எஸ்ஐஆா் பிரச்னைகளை எழுப்ப எதிா்க்கட்சிகள் முடிவு
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

