டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கொச்சி கோயிலில் திடீரென மிரண்ட யானை: பாகன் காயம்

கொச்சி கோயிலில் யானை திடீரென மிரண்டதில் அதன் பாகன் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 3:01 am

இணையதளச் செய்திப் பிரிவு

கொச்சி கோயிலில் யானை திடீரென மிரண்டதில் அதன் பாகன் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கேரள மாநிலம், கொச்சியில் திரிபுனித்துரா பூர்ணத்ரயீசா கோயில் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 'அதாழ சீவேலி' சடங்கிற்காக யானை வரிசையில் நிற்க வைக்கப்பட்டிருந்தது.

அப்போது சாமப்புழா உன்னிகிருஷ்ணன் என்ற ஆண் யானை, திடீரென ஆக்ரோஷமாக மாறியது.

இந்த சம்பவத்தில் அதன் பாகன் காயமடைந்தார். பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஆக்ரோஷமடைந்த யானை, கோயில் அலுவலகத்தை நோக்கிச் சென்று அங்கேயே நின்றது.

இந்தச் சம்பவம் காரணமாக பக்தர்கள் பீதியடைந்தனர். இருப்பினும் கோயில் அதிகாரிகள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து கூட்டத்தைப் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

கொச்சியில் உள்ள கோயில்களில் திருவிழாக்களின் போது பயன்படுத்தப்படும் யானைகள், அவ்வப்போது மதம் பிடித்து அட்டகாசம் செய்வது மற்றும் பாகன்களை காயப்படுத்துவது போன்ற சம்பவங்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.