/

ராஜஸ்தான்: தற்காப்புக்காக சிறுத்தையை கோடரியால் தாக்கிக்கொன்ற விவசாயி

ராஜஸ்தானில் சிறுத்தையிடம் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள விவசாயி ஒருவர் அதனை கோடரியால் தாக்கி கொன்றுள்ளார்.

News image
சிறுத்தை - கோப்புப்படம்.
Updated On :7 பிப்ரவரி 2026, 10:47 am

இணையதளச் செய்திப் பிரிவு

ராஜஸ்தானில் சிறுத்தையிடம் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள விவசாயி ஒருவர் அதனை கோடரியால் தாக்கிக் கொன்றுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், கோட்புட்லி-பெஹ்ரூர் மாவட்டத்தில் கர்கதி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஷ்ரவன் குர்ஜர்(48). இவர் தனது ஆடுகளுக்குத் தீவனம் சேகிரிப்பதற்காக வயலுக்குச் சென்றிருந்தார். மரக்கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது அருகிலுள்ள புதர்களில் மறைந்திருந்த சிறுத்தைக் குட்டி அவரைத் தாக்கியது.

சிறுத்தை நகம் பட்டதோடு கடித்ததில் விவசாயிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே தன்னை தற்காத்துக்கொள்ள கோடரியால் சிறுத்தையின் தலையில் தாக்கியுள்ளார். இதில் சிறுத்தை சம்பவ இடத்திலேயே இறந்தது. காயமடைந்த விவசாயி ஆல்வாரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுத்தையின் உடல் துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விதிகளின்படி மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை அதிகாரி மனோஜ் நாகா தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.