/

என் வேலை சரணடைதல்: பிரதமர் மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்!

அமெரிக்காவிடம் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

News image
பிரதமர் மோடி- கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 9:29 am

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவிடம் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்ததாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்கிறதா இல்லையா என்பதை இப்போது அமெரிக்கா கண்காணிக்கிறது.

ரஷியாவின் எண்ணெய்யை இந்தியா நேரடியாகவோ மறைமுகமாகவோ இறக்குமதி செய்வதாக அமெரிக்கா அறிந்தால், உடனேயே 25 சதவிகித வரியை விதித்து விடும். இதனை மோடி அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, என் பெயர் நரேந்திர் (மோடி), என் வேலை சரணடைதல் என்றும் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தபோதிலும், இதனை மத்திய அரசின் தரப்பில் இருந்து மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.