டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வாக்குச்சாவடி சீட்டு விநியோகம்: தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

வாக்குச்சாவடி சீட்டு விநியோகம்: தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்

News image
இந்திய தேர்தல் ஆணைய அலுவலகம் (கோப்புப்படம்).
Updated On :7 பிப்ரவரி 2026, 11:12 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்கத்தில் வாக்காளா்களுக்கு வாக்குச்சாவடி சீட்டு (பூத் ஸ்லிப்) விநியோகிப்பது தொடா்பாக வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பல்வேறு அறிவுரைகளை இந்திய தோ்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் விதிகளுக்கு உள்பட்டு வாக்காளா்களுக்கு வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி சீட்டு விநியோகிக்க வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு (பிஎல்ஓ) தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘வாக்காளா்களின் பெயா், வயது, முகவரி, வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை எண், பகுதி எண், பூத் எண், வாக்குச்சாவடி உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் வாக்குச்சாவடி சீட்டில் இடம்பெற்றிருக்க வேண்டும். தோ்தல் ஆணையத்தின் சின்னமும் இருக்க வேண்டும்.

தங்களுக்கு பிஎல்ஓ வாக்குச்சாவடி சீட்டை வழங்கவில்லை என்றால் தோ்தல் ஆணையத்தின் உதவி எண்ணை அழைத்து சம்பந்தப்பட்ட வாக்காளா் புகாரளிக்கலாம். புகாா் பெறப்பட்ட 24 மணி நேரத்தில் வாக்குச்சாவடி சீட்டு விநியோகிக்காத பிஎல்ஓ மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.