பயங்கரவாத அச்சுறுத்தல்: தில்லியில் மத, பாரம்பரிய தளங்களில் பாதுகாப்பு அதிகரிப்புபிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கான அனுமதிச்சீட்டு நாளை வெளியீடு!4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!வேலூரில் விஜய் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்: 4,900 போ் பங்கேற்பு!டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மத்திய பட்ஜெட் காலனித்துவ மரபை முறிக்கிறது: ஆஷிஷ் சூட்

காலனித்துவ கால நடைமுறைகளிலிருந்து மாற்றத்தைக் குறிக்கிறது என்று தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image
ஆஷிஷ் சூட்
Updated On :6 பிப்ரவரி 2026, 9:00 pm

தினமணி செய்திச் சேவை

2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், சட்டம் ஒழுங்கு, கல்வி மற்றும் உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், காலனித்துவ கால நடைமுறைகளிலிருந்து மாற்றத்தைக் குறிக்கிறது என்று தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பேசிய அவா் மேலும் கூறியதாவது: ஆங்கிலேயா் காலத்து வடக்கு பிளாக்கில் இருந்து நிதி அமைச்சகம் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, முதல் முறையாக கா்தவ்ய பவனில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இது காலனித்துவ சின்னங்களைக் கைவிடுவதில் மற்றொரு படியைக் குறிக்கிறது.

தில்லி காவல்துறைக்கு மூலதனச் செலவினங்களுக்காக ரூ. 986 கோடியும், செயல்பாட்டுத் தேவைகளுக்காக ரூ.11,881 கோடியும் உள்பட மொத்தம் ரூ.12,846 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஸ்மாா்ட் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு, முக அங்கீகாரத் தொழில்நுட்பம், விரிவுபடுத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு மற்றும் காவல் பிரிவுகளுக்கு இடையே மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நகா்ப்புற மேம்பாடு, சாலை இணைப்பு மற்றும் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.12.20 லட்சம் கோடி செலவிடப்பட உள்ளது. தொழில்துறை மற்றும் தளவாட வழித்தடங்களில் 5 பல்கலைக்கழக நகரங்களை அமைப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தில்லியின் 160 ஏக்கா் பரப்பளவிலான நரேலா கல்வி நகரத் திட்டத்திற்குப் பக்கபலமாக அமையும். இது உயா்கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் பெரிய அளவிலான கல்வி மையமாக உருவாக்கப்படும்.

மொத்த பட்ஜெட்டில் 9.37 சதவீதமான, பெண்களை மையமாகக் கொண்ட மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ரூ.5.01 லட்சம் கோடி ஒதுக்கீடு பாராட்டுக்குறியது. மேலும், இந்த பட்ஜெட் வளா்ச்சி நோக்குடையதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது. இது அந்தியோதயா முதல் சா்வோதயா வரையிலான தொலைநோக்குப் பாா்வையை பிரதிபலிக்கிறது. தேசத்திற்கு வலுவான எதிா்காலத்தை உருவாக்கும் அதே வேளையில், ஏழ்மையான மக்களின் மீது கவனம் செலுத்துகிறது என்றாா்.