டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் காலமானார்!

மலையாள திரையுலகின் மூத்த இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் காலமானார்...

News image
இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் - படம் - எக்ஸ்
Updated On :3 பிப்ரவரி 2026, 12:18 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மலையாள திரையுலகின் மூத்த இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷ் காலமானார்.

மலையாள திரையுலகின் மூத்த இசையமைப்பாளரான சங்கீதராஜன் என்று அழைக்கப்படும் எஸ்.பி. வெங்கடேஷ் (வயது 70) மாரடைப்பால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று (ஜன. 3) காலமானார்.

கடந்த 1985 ஆம் ஆண்டு வெளியான “ஜானகீய கோதாதி” எனும் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான எஸ்.பி. வெங்கடேஷ், மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் வங்கம் ஆகிய மொழிகளில் வெளியான ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

பல்வேறு ஹிட் பாடல்களை வழங்கியுள்ள எஸ்.பி. வெங்கடேஷ் மூத்த நடிகர்களான மம்மூட்டி, மோகன் லால் ஆகியோருடன் இணைந்து திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், இசையமைப்பாளர் எஸ்.பி. வெங்கடேஷின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.