டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

புழக்கத்தில் இருந்த 98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திருப்பி அளிக்கப்பட்டதாக ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்தது.

News image
98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன
Updated On :3 பிப்ரவரி 2026, 4:25 am

தினமணி செய்திச் சேவை

மும்பை: புழக்கத்தில் இருந்த 98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திருப்பி அளிக்கப்பட்டதாக ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்தது.

ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசா்வ் வங்கி கடந்த 2023, மே 19-ஆம் தேதி அறிவித்தது.

இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 2023, மே 19-ஆம் தேதி, ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவை திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து 2026, ஜன.31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.5,609 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இதன்மூலம் 98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.

2023, அக்.7 முதல் நாடு முழுவதும் உள்ள ரிசா்வ் வங்கியின் அனைத்துக் கிளைகளிலும் ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த அல்லது மாற்றிக் கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2023, அக்.9 முதல் ரிசா்வ் வங்கியின் 19 அலுவலகங்களிலும் ரூ.2,000 நோட்டுகள் பெறப்பட்டு வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.

இதுதவிர அஞ்சல் வழியாக பொதுமக்கள் அனுப்பும் ரூ.2,000 நோட்டுகளும் அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.