/

செமிகண்டக்டர் 2.0 துறை வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி!

செமிகண்டக்டர் 2.0 துறை வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

News image
செமிகண்டக்டர் - ANI
Updated On :1 பிப்ரவரி 2026, 6:29 am

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவின் செமிகண்டக்டர் மிஷன் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

கருவிகள் மற்றும் கச்சா பொருள்கள் மற்றும் இந்திய அறிவுசார் சொத்துகளை உற்பத்தி செய்வதற்காக ஐஎஸ்எம் 1.0, ஐஎஸ்எம் 2.0 அடிப்படையிலான கட்டமைப்புகள் தொடங்கப்படும்

செமிகண்டக்டர் 2.0 திட்ட வளர்ச்சிக்கு ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும் வெளியிட்ட அறிவிப்பில்,

நீடித்த சரக்கு போக்குவரத்துக்கான சூழல் அமைப்பிற்கு உத்வேகம் அளிக்கும் நடவடிக்கைகள் புதிய பிரத்யேக சரக்கு போக்குவரத்துக்கான வழித்தடம் உருவாக்கப்படும்.

20 புதிய தேசிய நீர்வழிப்பாதைகள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ஏற்படுத்தப்படும்.

பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் உருவாக்கப்படும்.

உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்கான கப்பல் பழுதுநீக்கும் கட்டமைப்பு வாரணாசி மற்றும் பாட்னாவில் அமைக்கப்படும்

கடலோர சரக்குப் போக்குவரத்து ஊக்குவிப்புத்திட்டம் தொடங்கப்படுவதன் மூலம் உள்நாட்டு நீர்வழிப்போக்குவரத்து மற்றும் கடலோரக் கப்பல் போக்குவரத்துக்கான் பங்களிப்பு அதிகரிக்கும்.

மத்திய பட்ஜெட் 2026-27 இல், தென்னிந்தியாவின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் சென்னைக்கு இரண்டு புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை – பெங்களூரு

சென்னை – ஹைதராபாத்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.