டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பட்ஜெட்டில் சிபிஐக்கு ரூ. 1,105 கோடி ஒதுக்கீடு!

பட்ஜெட் 2026: சிபிஐக்கு ரூ. 1,105 கோடி.. 4.4% அதிக நிதி ஒதுக்கீடு!

News image
- ANI
Updated On :1 பிப்ரவரி 2026, 4:45 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பட்ஜெட்டில் சிபிஐக்கு ரூ. 1,105 கோடி ஒதுக்கப்பட்டது. இன்று(பிப். 1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய அரசின் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) ரூ. 1,104.98 கோடி ஒதுக்கப்பட்டது.

சிபிஐ பயிற்சி மையங்களை நவீனமயமாக்கல், தடயவியல் மற்றும் தொழில்நுட்ப மையங்களை அமைத்தல், சிபிஐக்கென தனி கட்டடங்கள் உள்பட மத்திய புலனாய்வுப் பிரிவுக்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதலை முன்னிலைப்படுத்தி சிபிஐக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக நிதிநிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், சிபிஐக்கு ரூ. 1,058.3 கோடி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியைவிட 4.4 சதவீதம் கூடுதலாக சிபிஐக்கு இந்தப் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

summary

The Centre allocated Rs 1,104.98 crore for CBI in the Budget 2026-27 presented by Finance Minister Nirmala Sitharaman on Sunday, a nominal increase of 4.4 per cent from the ongoing fiscal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.