
என்னுடைய அமெரிக்கப் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? பிரதமருக்கு ரேவந்த் ரெட்டி கேள்வி!
என்னுடைய அமெரிக்கப் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பியது பற்றி...

பிரதமா் நரேந்திர மோடியுடன் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி. - கோப்புப் படம்
என்னுடைய அமெரிக்கப் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவரும் தெலங்கானா முதல்வருமாகிய ரேவந்த் ரெட்டி, திங்கள்கிழமை (ஆக. 24) கேள்வி எழுப்பியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் சேர்த்து10 நாள்கள் பயணமாக ஆகஸ்ட் 20 ஆம் தேதி இந்தியாவிலிருந்து ரேவந்த் ரெட்டி புறப்பட்டார்.
அமெரிக்கப் பயணத்துக்கான திட்டமும் நோக்கமும் உரிய விதிகளின்படி இல்லை என அவருடைய அமெரிக்கப் பயணத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்தது. ஆகையால், இங்கிலாந்துக்கான தனது பயணத்தை மட்டும் முடித்துக் கொண்டு ரேவந்த் ரெட்டி இந்தியா வந்தடைந்தார்.
இதுகுறித்து ரேவந்த் ரெட்டி பேசியதாவது:
அமெரிக்காவுக்கான என்னுடைய பயணத்தின் முன்மொழிவைப் பரிசீலித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அரசியல் நோக்கம் காரணமாகவே நிராகரித்தது. அப்படி அரசியல் நோக்கம் காரணமில்லை என்றால், இங்கிலாந்துக்கு அனுமதி அளித்த அமைச்சகம் அமெரிக்காவுக்கு மட்டும் அனுமதி தர மறுத்தது ஏன்? என்று பிரதமர் நரேந்திர மோடியை நோக்கி நான் கேள்வி எழுப்புகிறேன்.
’வைப்ரண்ட் குஜராத் 2047’ என்ற முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிக்காக, அந்த மாநில முதல்வர் பூபேந்திர படேலுக்கு மட்டும் ஆகஸ்ட் 17 முதல் 24 வரை அமெரிக்கா மற்றும் கனடாவுக்குப் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், அதே நோக்கத்துக்காக ’தெலங்கானா ரைசிங் 2047’ என்ற எனது முயற்சிக்கான அமெரிக்கப் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
Summary
Congress leader and Telangana Chief Minister Revanth Reddy questioned Prime Minister Narendra Modi on Monday (August 24) as to why permission for his visit to the United States was denied.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





