பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

பிஸியான திருட்டு வேலைக்கு இடையே தேநீர் குடித்த திருடன்! காட்டிக் கொடுத்த சிசிடிவி!

பிஸியான திருட்டு வேலைக்கு இடையே தேநீர் போட்டுக் குடித்த திருடன் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tea time

தேநீர் தயாரிப்பு - ENS

Published On :24 ஆகஸ்ட் 2026, 12:27 pm IST

பொதுவாக திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோர் பயத்தின் உச்சத்தில் இருப்பார்கள் என்றுதான் நினைத்திருப்போம், ஆனால், 4 கடைகளில் திருடியவர், இடையே கடை ஒன்றில் தேநீர் போட்டுக் குடித்த காட்சிகள் வெளியாகி அந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் சங்ருர் மாவட்டத்தில் தோலேவால் ரயில் நிலையம் அருகே உள்ள நான்கு கடைகளை ஒன்றன் பின் ஒன்றாக உடைத்து உள்ளே சென்று விலை உயர்ந்தபொருள்களை திருடிய திருடன், அங்கிருந்த குளிர்பதனப் பெட்டியில் இருந்த பாலை எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்சி தேநீர் போட்டுக் குடித்த சம்பவம் காவல்துறைக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

எங்கே மாட்டிக்கொள்வோமோ என்ற பயத்தில் கொள்ளையின்போது படபடப்புடன் திருடர்கள் காணப்படுவார்கள். ஆனால், ஏதோ எட்டு அல்லது ஒன்பது மணி நேர பணி நேரத்தில் ஒரு குட்டி பிரேக் எடுப்பது போல, 4 கடைகளில் திருட வந்து, ஒரு கடையில் சாவகாசமாக தேநீர் போட்டுக் குடித்ததோடு மட்டுமில்லை, அந்த பாத்திரங்களை தேய்த்து சுத்தமாக துடைத்து வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் பஞ்சாப் திருடன்.

முதலில், ஒரு கடைக்குள் நுழைந்து ரூ.25 ஆயிரம் ரூபாயை திருடிய பிறகு, அருகில் உள்ள கடைக்குச் சென்றிருக்கிறார். அங்கு பணம் மற்றும் செல்போன் போன்வற்றை திருடிக் கொண்ட பிறகு, அங்கேதான் தேநீர் போட்டுக் குடித்துவிட்டு, டீ கப், பாத்திரம் அனைத்தையும் தேய்த்து, எங்கிருந்து எடுத்தாரோ அங்கேயே பத்திரமாக வைத்துச் சென்றிருக்கிறார். இவை அனைத்தும், கடைக்குள் இருந்த சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது.

சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

Summary

Thief pauses for tea break busy burglary CCTV footage

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.